மாயாவுக்காக பலிகடாவாக்கப்பட்டுள்ளார் விசித்ரா. 

Vichitra Evicted From Bigg Boss 7 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் விஷ்ணுவை தவிர்த்து அனைவரும் இடம் பெற்றுள்ள நிலையில் வழக்கம் போல மாயா தான் மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்று கடைசி இடத்தில் இருந்து வருகிறார். 

கடந்த முறையும் மாயா கடைசி இடத்தில் இருந்த நிலையில் ரவீனா வெளியேற்றப்பட்டார். இந்த முறையில் அப்படித்தான் அப்பட்டமாக மாயாவை காப்பாற்றி நல்ல ஓட்டுக்களுடன் சேப் ஃசோனில் இருந்த விசித்திராவை வெளியேற்றி உள்ளனர்.

விசித்ரா வெற்றியாளராக வர வேண்டும் என லட்சக்கணக்கான மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் விஜய் டிவி அவரை வெளியேற்றி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.