வேட்டையன் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!
வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் நேற்று வெளியானது.
TJ ஞானவேல் இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில், போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தலைவர் படம் என்றாலே கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்று அனைவரும் அறிந்தது அதேபோல் நேற்று ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் வசூலிலும் தூள் கிளப்பி வருகிறது.
முதல் நாளில் 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வார இறுதி நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.