Vettaiyaadu Vilaiyaadu 2 Heroine
Vettaiyaadu Vilaiyaadu 2 Heroine

கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vettaiyaadu Vilaiyaadu 2 Heroine : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வேட்டையாடு விளையாடு.

இந்த படத்தில் கமல்ஹாசன் போலீசாக நடித்து மிரட்டியிருப்பார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் கௌதம் மேனன் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் கதையை கேட்ட கமலஹாசனும் நடிக்க ஓகே சொல்லி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து இப்படத்தின் நாயகியாக நடித்த ஜோதிகாவுக்கு பதில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்தது அந்த ஹிட் படத்தோட இரண்டாம் பாகம் தான்.. உறுதி செய்த கௌதம் மேனன் – உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் அதேசமயம் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்கலாம் என்ற ஐடியாவும் படக்குழுவிற்கு இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களில் யார் கமலுக்கு ஜோடியாக போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.