Pushpa 2

வெந்து தணிந்தது காடு 2 படம் தாமதமாக என்ன காரணம்? கௌதம் மேனன் ஓபன் டாக்..!

வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் தாமதத்திற்கான காரணத்தை கூறியுள்ளார் கௌதம் மேனன்.

Venthu Thanindhathu Kaadu 2 Movie Gautham Menon Open Talk..!
Venthu Thanindhathu Kaadu 2 Movie Gautham Menon Open Talk..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தமிழ் சினிமாவில் பல படங்களை நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும்.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் சிம்பு நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில் இது குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வரவில்லை இது குறித்து இயக்குனர் கௌதம் மேனன் காரணத்தை சொல்லியுள்ளார்.

அதாவது வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்தில் ஸ்கிரிப்ட் வேலைகள் முடித்து விட்டதாகவும் ஆனால் சிம்பு படம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை அதனால் தான் இந்த படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Venthu Thanindhathu Kaadu 2 Movie Gautham Menon Open Talk..!
Venthu Thanindhathu Kaadu 2 Movie Gautham Menon Open Talk..!