Web Ads

பவதாரனியுடம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வெங்கட் பிரபு உருக்கம்..!

பவதாரணி உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவு ஒன்றை செய்துள்ளார் வெங்கட் பிரபு.

Venkat Prabhu released the photo of Bhavatharani..!
Venkat Prabhu released the photo of Bhavatharani..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு இவரின் தங்கையும் இளையராஜாவின் மகளும் ஆன பவதாரணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புற்று நோயால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தார்.

பவதாரணி அனேகன், இரும்பு குதிரை, பிரியாணி, பிதாமகன் ,மங்காத்தா, ஃபிரண்ட்ஸ் போன்ற பல படங்களுக்கு ஹிட் பாடல்கள் பாடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இறந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒரு வருடமாகிவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி” என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் வெங்கட் பிரபுவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.