வெங்கட் பிரபு, எஸ்கே கூட்டணியில் இணைகிறார் ரம்யா நம்பீசன்..

விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கவுள்ள படத்தின் தகவல்கள் பார்ப்போம்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், படத்தின் கிராபிக்ஸ் பணிகள், நடிகர்கள் ஒப்பந்தம், படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. முன்னதாக இருவரும் கதைக்களம் தொடர்பாக அமெரிக்கா சென்று வந்தனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கவுள்ளார். அவருடன் இணைந்து ரம்யா நம்பீசனும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது இணையத்தில் தகவலாக வெளியானது. அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, தனது அடுத்த படம் என உறுதிப்படுத்தியுள்ளார் ரம்யா நம்பீசன்.

தற்போது ‘சேயோன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அதனை ஒரே கட்டமாக முடித்துவிட்டு, வெங்கட்பிரபு படத்தை தொடங்க முடிவு செய்துள்ளார். இதில் நடித்துக் கொண்டே ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கவுள்ள படத்தில் நடிக்க திட்டமிட்டு உள்ளார். இதற்கிடையே இவரது தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘ தாய் கிழவி’ படம் வருகிற 27-ந்தேதி வெளியாகவுள்ளது. ப்ரிமியர் ஷோ பார்த்த திரைப் பிரபலங்கள் படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

venkat prabhu direct film join to ramya nambessan
venkat prabhu direct film join to ramya nambessan