ஹாலிவுட் தரத்தில் உருவாகும் கோட் ரீமேக் படம் என பரவிய தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார் வெங்கட் பிரபு. 

Venkat Prabhu About GOAT Movie is Remake : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற பெயரில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

உலகளாவிய தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் தரத்தில் உருவாகும் இந்த திரைப்படம் ஹாலிவுட் படமான ஜெமினி மேன் ரீமேக் என முன்பு இருந்தே கிசுகிசு பரவி வருகிறது. இரண்டு படங்களின் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இப்படியான நிலையில் இது பற்றி வெங்கட் பிரபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அவர் இது ரீமேக் எல்லாம் இல்லை, புதிய கதை தான் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.