எஸ் ஜே சூர்யா உட்பட பலர் நடிப்பில் வெளியான வதந்தி திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. இயக்குனராக திரையுலகில் அறிமுகமான இவர் தற்போது நடிகராக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
கதைக்களம் :
எஸ் ஜே சூர்யா போலீஸ் அதிகாரியாக வேலை செய்து வர திடீரென ஒரு பெண் மர்மமான முறையில் கொல்லப்படுகிறாள். எஸ் ஜே சூர்யா இந்த கேஸை விசாரிக்கையில் உண்மையில் கண்டு பிடிக்க முடியாமல் திணறி வர அதன்பிறகு அடுத்தடுத்து பல முடிச்சுகள் அவிழ்கின்றன. கடைசியில் அந்த பெண் யார்? இந்த கொலைகான காரணம் என்ன என்று கண்டுபிடிக்க பட்டதா? இல்லையா என்பது தான் கதைக்களம்.
படத்தை பற்றிய அலசல் :
எஸ். ஜே சூர்யாவின் நடிப்பு படத்துக்கு பெரிய பலம். நடிப்பில் மிரட்டியுள்ளார்.
அறிமுக நாயகியாக இருந்தாலும் நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்துள்ளார் சஞ்சனா.
அடுத்து லைலா, குமரன் உள்ளிட்டோர் நடிப்பின் மூலம் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.
இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் ஒரு அப்பாவி பெண்ணின் மரணத்தை நியூஸ் சேனல்கள் டிஆர்பி-க்காக எப்படி எல்லாம் பயன்படுத்தி கொள்கிறது? என்னவெல்லாம் வதந்திகளை கிளம்புகிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பது கூடுதல் சிறப்பு.
படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியவை படத்துக்கு உயிர் கொடுத்துள்ளன.