Vaseegara Secrets | Thala Ajith | Thalapathy Vijay

Vaseegara Secret : தல அஜித்தை தாக்கி வசனம் பேச நோ சொல்லியுள்ளார் தளபதி. இந்த தகவலை இயக்குனர் ஒருவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவரும் இன்று நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

இருப்பினும் இருவரும் வளர்ந்து வந்த காலகட்டத்தில் இவர்களது படங்களிலும் ஒருவரையொருவர் தாக்கி வசனங்கள் இடம் பெற்றிருந்தன.

விஜய் நடிப்பில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்த படம் வசீகரா. இந்த படத்தை செல்வபாரதி தான் இயக்கி இருந்தார்.

அவர் சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் இந்த படம் ரிலீஸாவதற்கு முன்பு ஒரு மாதம் இருக்கும் போது தான் அஜித்தின் வில்லன் படம் ரிலீசாகி இருந்தது.

அந்த படத்தை வைத்து தளபதி விஜய் நீ பேர் வைத்தா தான் வில்லன், நான் எப்பவுமே வில்லன் டா என்பது போல வசனம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இதற்கு விஜய் நோ சொல்லிவிட்டார். மேலும் என்னிடம் அண்ணே இதெல்லாம் வேண்டாம் எனவும் விஜய் கூறியதாக இயக்குனரே கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.