Varma Dropped

Varma Dropped Reason : வர்மா பட டிராப்பிற்கு விக்ரமே காரணம் என கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

தமிழ் சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக வர்மா திரைபடம் உருவாகியுள்ளது. பாலா இயக்கி இருந்த இந்த படத்தில் ஹீரோவாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகி இருந்தார்.

தளபதி 64 படத்தின் இயக்குனர் இவரா? – பிரபல இயக்குனரே வெளியிட்ட தகவல்.!

படம் முழுவதும் முடிவடைந்து இந்த மாதம் வெளியாகும் என எதிர்பாக்கப்பட்டு வந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான E4 எண்டெர்டைன்மென்ட் நிறுவனம் அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

அந்த அறிவிப்பில் பாலா படத்தை சரியாக இயக்கவில்லை. இப்படம் துளி கூட அர்ஜுன் ரெட்டி திரைப்படத்துடன் ஒத்து போகவில்லை என்பதால் இதனை கை விடுவதாகவும் புதிய இயக்குனரை வைத்து இந்த படத்தை ரீஷூட் செய்ய இருப்பதாகவும் அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது இப்படம் கைவிட படுவதற்கு முக்கிய காரணம் விக்ரம் தான். அவர் உட்பட அனைவருமே இந்த படத்தை பார்த்துள்ளனர்.

இந்த படத்திற்கும் அர்ஜுன் ரெட்டி படத்திற்கு எவ்வித சம்மந்தமும் இல்லாததால் தன்னுடைய மகனின் திரையுலக எதிர்காலத்தை எண்ணியே இப்படத்தை கை விட அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

வர்மா படத்தை பாலா இயக்க இருப்பதாக அறிவிப்பு வந்த போதே பாலாவின் டிராக் முற்றிலும் வேறு. அவரால் இந்த படத்தை சரியாக இயக்க முடியுமா? என பேச்சு கிளம்பியது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.