படம் மட்டுமல்லாமல் டிரைலரிலும் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் மோத உள்ளது.

தமிழ் சினிமாவில் இரு பெரும் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இந்த வருட பொங்கலுக்கு அஜித் நடிப்பின் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

படம் மட்டுமல்ல ட்ரெய்லரிலும் மோதல் தான்.‌. வாரிசு மற்றும் துணிவு பட டிரைலர் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படங்களின் மூலம் அஜித் மற்றும் விஜய் என இருவரும் நேருக்கு நேராக மோதிக் கொள்ள உள்ளனர். இதன் காரணமாக இரண்டு படங்களும் போட்டி போட்டுக் கொண்டு பிரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

சமீபத்தில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கொலகாலமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து இந்த வருட புத்தாண்டு தின விருந்தாக வரும் டிசம்பர் 31ஆம் தேதி வாரிசு படத்தில் ட்ரெய்லர் வெளியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

தெலுங்கானாவில் இதற்காக பெரிய நிகழ்ச்சி ஒன்றை தில் ராஜு ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

படம் மட்டுமல்ல ட்ரெய்லரிலும் மோதல் தான்.‌. வாரிசு மற்றும் துணிவு பட டிரைலர் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.!!

அதேபோல் டிசம்பர் 31ம் தேதி துணிவு திரைப்படத்தின் அப்டேட் வழியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் வாரிசு மற்றும் துணிவு படத்தின் டிரைலர்களும் ஒரே நாளில் மோதிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.