வாரிசை காட்டிலும் துணிவு திரைப்படம் தொடர்ந்து முன்னேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் துணிவு விஜய் நடிப்பில் வாரிசு என இரண்டு திரைப்படங்களும் உங்களுக்கு நேருக்கு நேராக மோதிக் கொள்ள உள்ளன. இந்த இரண்டு படங்களும் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசை மிஞ்சும் துணிவு.. வசூலில் மாஸ் காட்ட தயாராகும் அஜித் - காரணங்கள் என்னென்ன தெரியுமா?

இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு இருந்தாலும் வாரிசு படத்தை காட்டிலும் துணிவு திரைப்படம் அதிக அளவில் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. துணிவு திரைப்படம் பெரும்பாலான திரையரங்குகளில் இரவு ஒரு மணிக்கு வெளியாக உள்ள நிலையில் வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு தான் ரிலீஸாக உள்ளது.

2. துணிவு திரைப்படம் தெலுங்கு மொழியிலும் ஜனவரி 11-ஆம் தேதியே வெளியாக உள்ள நிலையில் வாரிசு திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3. துணிவு திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என்பதால் ஒரு நாளைக்கு ஒரு ஸ்கிரீனில் ஐந்து அல்லது ஆறு ஷோ ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வாரிசு படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் என்பதால் ஒரு நாளைக்கு ஒரு ஸ்கிரீனில் நான்கு ஷோ மட்டுமே திரையிடப்படும் என சொல்லப்படுகிறது.

வாரிசை மிஞ்சும் துணிவு.. வசூலில் மாஸ் காட்ட தயாராகும் அஜித் - காரணங்கள் என்னென்ன தெரியுமா?

இந்த காரணங்களால் வாரிசு படத்தை காட்டிலும் துணிவு படத்தின் வசூல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.