திடீரென ஒரு வாரத்திற்கு வாரிசு படத்தின் படப்பிடிப்புகள் மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

திடீரென ஒரு வாரத்துக்கு மொத்தமாக நிறுத்தப்பட்ட வாரிசு படப்பிடிப்பு.. காரணம் என்ன தெரியுமா? வெளியான ஷாக் தகவல்

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடந்து வந்த நிலையில் தற்போது ஒரு வாரத்திற்கு இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.

இரவு பகல் பார்க்காமல் தொடர்ந்து வேலை பார்த்து வந்த இயக்குனர் வம்சிக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட மருத்துவர்கள் அவருக்கு கட்டாயம் ஒரு வாரம் ஓய்வு தேவை என அறிவுறுத்தியதன் காரணமாக இந்த வாரம் நடக்க இருந்த படப்பிடிப்புகள் மொத்தமாக அடுத்த வாரத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

திடீரென ஒரு வாரத்துக்கு மொத்தமாக நிறுத்தப்பட்ட வாரிசு படப்பிடிப்பு.. காரணம் என்ன தெரியுமா? வெளியான ஷாக் தகவல்

வாரிசு படத்தின் சிங்கிள் ட்ராக் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மேலும் இந்த படம் பொங்கல் விருந்தாக 2023 வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.