தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.

ரசிகர்களால் அன்போடு இளைய தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து வம்சி படைபள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரபு, யோகி பாபு, சங்கீதா, ஷாம், ஸ்ரீகாந்த் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.

தீபாவளியன்று மாஸ் காட்ட இருக்கும் விஜய் பட பாடல்!!… கொண்டாட்டத்தின் உச்சியில் ரசிகர்கள்!!.

இப்படத்தில் ஆப் டெவலப்பராக நடித்து வரும் தளபதி விஜயின் போஸ்டர்கள் அவரது பிறந்த நாளை முன்னிட்டு இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதன் பிறகு இப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது சூப்பரான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

தீபாவளியன்று மாஸ் காட்ட இருக்கும் விஜய் பட பாடல்!!… கொண்டாட்டத்தின் உச்சியில் ரசிகர்கள்!!.

அதாவது வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தப் பாடல் தளபதி விஜய் அவர்களின் என்ட்ரி பாடலாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த சூப்பரான தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சியில் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.