வாரிசு திரைப்படத்தின் இயக்குனரான வம்சி படைப்பள்ளி விஜய் குறித்து நெகிழ்ச்சி பொங்க பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

ரசிகர்களால் அன்போடு இளையதளபதி என்று அழைக்கப்பட்டு வருபவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜயுடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, பிரபு, சரத்குமார், ஷாம் உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தமன் இசையில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது.

விஜய்யிடம் அவ்வளவு விஷயம் இருக்கு!!… நெகிழ்ச்சியுடன் கூறிய வாரிசு இயக்குனர்!.

இந்நிலையில் வாரிசு திரைப்படம் குறித்து இப்படத்தின் இயக்குனரான வம்சி படைப்பள்ளி நேர்காணல் ஒன்றில் விஜய் குறித்து நெகிழ்ச்சி பொங்க சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் அவர், விஜய் சார யாராலும் அடிச்சுக்க முடியாது, அவரு அந்த உயரத்துல இருக்காருன்னா அதுக்கு பின்னாடி அவ்வளவு விஷயம் இருக்கு. பேஷன், நேர்மை, ஒழுக்கம் இந்த மூன்றும் ஒருத்தர்கிட்ட இருந்தா அவர யாராலும் அடிச்சுக்க முடியாது. விஜய் சார் அப்படியானவர் தான் என்று நெகிழ்ச்சி பொங்க பேசியிருக்கிறார். அதுமட்டுமின்றி விஜய் மிகச்சிறந்த மனிதர் என்றும் கூறியிருக்கிறார்.