Vanitha Vs Kasthuri Fight on Twitter
Vanitha Vs Kasthuri Fight on Twitter

கஸ்தூரிக்கு வனிதாவுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் வனிதா முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

Vanitha Vs Kasthuri Fight on Twitter : தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான விஜயக்குமாரின் மகள் வனிதா கடந்த ஜூலை 27-ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வனிதாவை திருமணம் பற்றி விவாதித்தும் விமர்சித்தும் வருகின்றனர்.

தன்னுடைய திருமணத்தை பற்றி விமர்சிப்பவர்களுடன் தர லோக்கலாக இறங்கி சண்டையிட்டு வருகிறார் வனிதா. ஏற்கனவே சூர்யா தேவி, லிப்ரா ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோருடன் சண்டையிட்ட வனிதா தற்போது கஸ்தூரியுடன் சண்டையிட்டு வருகிறார்.

நடிகை கஸ்தூரி பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக பேசியதை அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

கவின் லாஸ்லியாவுக்கு இடையே இருப்பது காதல் இல்ல, அது ஒரு? – சர்ச்சை நடிகை பரபரப்பு பேட்டி.!

வனிதா கஸ்தூரியை தரக்குறைவாக பேசி வருகிறார். தொடர்ந்து கஸ்தூரியும் வனிதாவின் பதிவுகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் வனிதா கஸ்தூரியை என்னுடைய வாழ்க்கையில் மற்றும் டுவிட்டரில் பிளாக் செய்வதாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இவர்கள் இடையே நடந்து வரும் வாக்குவாதம் டுவிட்டரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் வனிதா விஜயகுமார் லைவ் வீடியோவில் லட்சுமி ராமகிருஷ்ணனை வயது வித்தியாசம் இல்லாமல் தரக்குறைவாக பேசி இருந்தார்.

அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.