முன்னாள் கணவரின் மரணம் குறித்து மனம் திறந்துள்ளார் வனிதா விஜயகுமார்.

தென்னிந்திய சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் வனிதா விஜயகுமார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தில் முடிந்ததை தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து அவர் குடி போதைக்கு அடிமையானவர் என்ற காரணத்தினால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.

இந்த நிலையில் குடிபோதை காரணமாக கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பீட்டர் பால் உயிரிழந்தார்.

தற்போது பீட்டர் பால் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார். தன்னுடைய அம்மா சொன்ன விஷயங்களை நினைவு கூறிய வனிதா விஜயகுமார் இனி நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய இடத்திற்கு சென்று விட்டீர்கள் என பதிவு செய்துள்ளார்.

வனிதா விஜயகுமாரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.