Valimai Fight Sequence Shooting Plan

இந்தியாவில் அது வேலைக்கு ஆகாது என படக்குழு திட்டவட்டமாக முடிவெடுத்திருப்பதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Valimai Fight Sequence Shooting Plan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். அவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை மொத்தம் 45 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முக்கியமான காட்சிகளை இயக்குனர் பல்கேரியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் படமாக்க திட்டமிட்டு இருந்தார்.

இட ஒதுக்கீடு பாதிக்கப்படும், கல்விக் கட்டணம் உயரும்.. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு IoE அந்தஸ்து வேண்டாம் – தமிழக அரசு திட்டவட்டம்.!!

கொரானா தொற்று காரணமாக இந்த படப்பிடிப்புகள் இந்தியாவிலேயே நடத்தப்படலாம் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் வெளிநாட்டு சண்டைக் கலைஞர்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி சண்டைக்காட்சிகள் உருவாக்கப்பட இருப்பதால் நிச்சயம் இந்த காட்சிகளை வெளிநாட்டில் தான் படமாக்க வேண்டும் என்று படக்குழு உறுதியாக உள்ளதாக நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Popcorn box; Disposable cup for beverages with straw, film strip, ticket and clapper board. Detailed vector illustration. EPS10 file.

மேலும் சித்ரா லட்சுமணன் அவர்கள் இந்தத் தகவலை படக்குழு தான் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் வலிமை படத்தின் சண்டைக்காட்சிகள் வெறித்தனமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.