டிக் டாக் பிரபலம் ஒருவர் தல அஜித்துடன் இணைந்து வலிமை படத்தில் நடித்துள்ளார்.

Vaishnavi Chaitanya in Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ‌ உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் கேப்டனுக்கு திடீர் மாரடைப்பு : மருத்துவமனை தகவல்

படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடைந்து படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் Glimpse வீடியோ இணையத்தில் வெளியாகி இருந்தது.

இந்த மாதிரி தான் இனிமே வரணும் – Rudra Thandavam Special Show | Rishi Richard, Dharsha | HD

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தில் தல அஜித்தின் டிக் டாக் பிரபலமான வைஷ்ணவி சைதன்யா என்பவர் இணைந்து நடித்து இருப்பது தெரியவந்துள்ளது. அவர் தல அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.