வாய்ப்பு இல்லாத போது வாழ்க்கை கொடுத்தது அந்த ஒரு விளம்பரம் தான் என அப்பாஸ் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அப்பாஸ். 90-களில் பல படங்களில் நடித்த இவர் படிப்படியாக வாய்ப்புகளை இழந்து ஒரு கட்டத்தில் மொத்தமாக காணாமல் போனார். 

இதையடுத்து ஹார்பிக் விளம்பரத்தில் தான் இவரை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் தற்போது இந்த விளம்பரம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். 

அதாவது, இந்த விளம்பரத்தில் நடித்த போது இது தேவையா என பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் வாய்ப்பு இல்லாத போது அந்த விளம்பரம் தான் எனக்கு சோறு போட்டது. 8 வருடங்கள் அக்ரீமெண்ட் போட்டு நிறைய பணம் கொடுத்தார்கள் என்று பேசியுள்ளார். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.