
நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் காலமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடுவதற்கு பிறகு தற்போது மீண்டும் நடிகர் தொடங்கியுள்ள இவர் மாமன்னன் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் என்பவர் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்திருந்தார்.
மேலும் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த இவர் கல்லீரல் ஜெயலலிதா காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது இல்லத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவு வடிவேலு குடும்பத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பலரும் வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
