Pushpa 2

விஜய்யின் அரசியல், அஜித்தின் கார் ரேஸ் குறித்து, வடிவேலு வாய்ஸ்..

விஜய் மற்றும் அஜித் பற்றிய கேள்விக்கு வடிவேலு அளித்துள்ள சாமர்த்திய பதில் பார்ப்போம்..

விஜய் தவெக கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்கினாலும், தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும். அவர் நடிப்பிலிருந்து விலகக்கூடாது எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மறுபக்கம், அஜித் கார் ரேஸிற்கு போனாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, வைகைப்புயல் வடிவேலுவிடம் அஜித் மற்றும் விஜய் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. ‘விஜய் அரசியல் கட்சி துவங்கி விட்டார், அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என கேட்டபொழுது, ‘வேறு எதாவது பேசுவோமா’ என்றார்.

அதைப்போல அஜித் கார் ரேஸிற்கு சென்றதை பற்றிய கேள்விக்கும் ‘வேறு எதாவது பேசுவோமோ?’ என சொல்லி அந்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அஜித்துடன் ஒரு சில படங்களிலும் விஜய்யுடன் பல படங்களிலும் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், எதாவது சொல்ல அது சர்ச்சையாக மாறினால் என்ன ஆவது, அதன் காரணமாக, எந்த கருத்தையும் சொல்லவில்லை என ரசிகர்கள் புரிந்து கொள்கின்றனர்.

முன்னதாக, ‘மாமன்னன்’ படத்தின் மூலம் தரமான முத்திரை பதித்த வடிவேலு, தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம், பகத் பாசிலுடன் ஒரு படம் மற்றும் பிரபுதேவா நடிப்பில் ஒரு படம் என வடிவேலு மீண்டும் செம பிசி..!

vadivelu about ajith car race and vijay political entry
vadivelu about ajith car race and vijay political entry