Web Ads

கார்த்தி நடிக்கும் வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா? வெளியான தகவல்.!!

Web Ad 2

கார்த்தி நடிக்கும் வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

vaa vaathiyare movie release date update

vaa vaathiyare movie release date update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவரது நடிப்பில் சமீபத்தில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அரவிந்த்சாமி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார் கீர்த்தி செட்டி,சத்யராஜ், ராஜ்கிரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தின் டீசரும், பாடல்களும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் டிசம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த படத்தை இறுதி கட்ட பணிகள் இன்னும் முடியாததால் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் படக்குழு படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய தீவிரமாக வேலை பார்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vaa vaathiyare movie release date update

vaa vaathiyare movie release date update