பீஸ்ட் பட ட்ரைலரில் முகமூடியுடன் வந்த வில்லன் யார் என தெரியவந்துள்ளது.

Unknown Secrets of Beast Trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் இவர் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 18-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அபர்ணா தாஸ் விஜய்யின் தங்கையாக நடித்துள்ளார்.

மேலும் செல்வராகவன் உட்பட பலர் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலரில் வில்லன் ஒருவர் முகமூடி அணிந்து வரும் காட்சி இடம்பெற்று வருகின்றது. தற்போது அது யார் என தெரியவந்துள்ளது.

மலையாளத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் ஷைன் டாம் சாக்கோ தான் அது என தெரிய வந்துள்ளது. முகமூடியுடன் இருக்கும் புகைப்படத்தை அவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.