பீஸ்ட் படம் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

Unknown Secrets of Beast : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் கதைகளம் குறித்த தகவல்கள் போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான ஒரு போஸ்டரில் தளபதி விஜய் கையில் துப்பாக்கியுடன் மால் அருகே நின்று கொண்டிருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. அவருக்குப் பின் புறத்தில் ராணுவ வீரர்கள் இருப்பதை காணலாம்.

இன்னொரு போஸ்டரில் ரத்தக் கரையுடன் நின்று கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. இதனால் பீஸ்ட் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாகவும் துப்பாக்கி சுடுதல் குண்டு வீச்சு போன்ற காட்சிகள் அதிக அளவில் இடம் பெறும் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகும் திரில்லர் ஆக்சன் திரைப்படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.