ஆக்ஷன் கிங் அர்ஜுன் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்து..!

ஆக்ஷன் கிங் அர்ஜுன் வீட்டில் விசேஷம் நடந்துள்ளதால் வாழ்த்துக்கள் குவிந்துள்ளது.

umapathy and aishwarya 1 st anniversary
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் அர்ஜூன். பல்வேறு படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் கடந்த வருடம் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா உடன் திருமணம் நடந்து இருந்தது.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில் இவர்களது திருமண நாளை என்று கொண்டாடியுள்ளனர்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

umapathy and aishwarya 1 st anniversary
