ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்து உதயநிதி ஸ்டாலின் விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகனான இவர் தற்போது அரசியலில் அமைச்சராகிவிட்ட காரணத்தினால் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என அறிவித்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படமே இவர் நடிக்கும் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சரானால் மிகவும் பிஸியாகி விட்டதால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்து உதயநிதி ஸ்டாலின் விலக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இனிவரும் காலங்களில் அவருக்குப் பதிலாக அவரின் மனைவி கிருத்திகா உதயநிதி முக்கிய பொறுப்புகளை வகிப்பார் எனவும் தெரியவந்துள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.