குட் பேட் அக்லி ஷூட்டிங்கில், அஜித்துடன் திரிஷா மோதலா?: வெளியேறியது ஏன்?
சினிமா உலகைப் பொறுத்தவரையில், நடிகரானவர் எத்தனை வயதானாலும் ஹீரோவாக நடிக்கலாம். ஆனால், நடிகையானவர் ஹீரோயினியாகவே தொடர முடியாது. அவ்வகையில், விதிவிலக்காக மார்க்கெட்டில் தனித்து நிற்பவர்களில் திரிஷா குறிப்பிடத்தக்கவர்.
41 வயதிலும் இளமை ததும்ப ததும்ப இருப்பதால், அவருக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி நிற்கின்றன. தற்போது விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, எவிடன்ஸ், குட் பேட் அக்லி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
இதில் விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, எவிடன்ஸ் போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டார் திரிஷா.
தற்போது அவர் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. இதன் ஷூட்டிங் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது.
அங்கு அஜித், திரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது குட் பேட் அக்லி ஷூட்டிங்கில் இருந்து திடீரென கிளம்பி சென்னைக்கு வந்துள்ளார் திரிஷா.
குட் பேட் அக்லி படக்குழுவினருடன் ஏற்பட்ட மோதலால் அவர் சென்னை திரும்பினாரா அல்லது அஜித்துடன் ஏதாவது பிரச்சனையா என்று பல்வேறு கேள்விகள் உலா வந்தன. ஆனால், அவர் திடீரென சென்னை வந்ததற்கான உண்மை காரணமே வேறு என கூறப்படுகிறது.
திரிஷா சினிமா மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார். அந்த வகையில், நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காக தான் நடிகை திரிஷா சென்னைக்கு வந்திருக்கிறார்.
அந்த விளம்பர ஷூட்டிங்கில் நடித்து முடித்த பின்னர், அவர் மீண்டும் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று குட் பேட் அக்லி ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஆதிக், அஜித் ரசிகர் என்பதால் செம மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள் சொல்வார்களா.. ‘தல’ படம் அமர்க்களம் என.! பார்க்கலாம்..