தளபதி 67 படத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக போஸ்டர் ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியானதை தொடர்ந்து நேற்று படத்தின் கமிட் ஆகியுள்ள நடிகர் நடிகைகள் குறித்து அறிவிப்பு தொடர்ந்து வெளியாகியது.

அர்ஜுன், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் என மொத்தம் எட்டு பிரபலங்கள் இந்த படத்தில் கமிட்டாகி இருப்பதாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் நாயகியாக திரிஷா நடித்து வருவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

இருந்த போதிலும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த படத்தில் திரிஷா நடிப்பதற்கான போஸ்டர் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.