போன் காண்டாக்ட் நடிகர்களுக்கு புது பெயர் வைத்து சேவ் செய்துள்ளார் நடிகை திரிஷா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 1990 முதல் தற்போது வரை பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் அப்படியே அதே இளமையோடு நடித்து வருகிறார்.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் தளபதி விஜய் ஜோடியாக நடிக்கப் போகிறார் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய போன் காண்டாக்ட்டில் நடிகர்களின் நம்பர் என்ன பெயரில் சேவ் செய்து வைத்திருப்பார் என்பதை தெரிவித்துள்ளார்.

தனுஷின் பெயரை டி எனவும் சிம்புவின் நம்பரை சிம் என சேவ் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விஜயின் நம்பரை அவர் கில்லி படத்தில் போது அணிந்த டீச்சர்ட்டில் Cheetah என்று எழுதி இருக்கும். சூட்டிங் ஸ்பாட்டில் அவரை அப்படியே கூப்பிட்டு பழகியதால் அதை அவருடைய பெயராக மொபைலில் ஷேவ் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் குறித்து கேட்டதற்கு அவருடைய நம்பர் என்னிடம் இல்லை ஒரு வேலை இருந்திருந்தால் ஜென்டில்மேன் என பதிவு செய்திருப்பேன் என தெரிவித்துள்ளார். அடுத்து ஆர்யாவின் நம்பரை ஜாம் என சேமித்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.