விக்ரமின் “கோப்ரா” படத்தின் பாடல்களுக்கான ட்ராக் லிஸ்ட்டை படக்குழு வெளியிட்டுள்ளது இதனை ரசிகர்கள் தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர்தான் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது தயாராகி இருக்கும் படம் தான் “கோப்ரா”. இப்படத்தை பிரபல இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்க மேலும் கே எஸ் ரவிக்குமார், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கன்னிகா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கோப்ரா” படம் வரும் ஆக்ஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவரும் ஜூலை 11 ஆம் தேதியான நாளை சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பாடலுக்கான ட்ராக் லிஸ்ட் புகைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகி இருக்கும் ஐந்து பாடல்களில் தலைப்பினை குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து மூன்று பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மீதம் இருக்கும் இரண்டு பாடல் நாளை இசை வெளியீட்டு விழாவில் வெளியாக இருக்கிறது. இதனை ரசிகர்கள் அவர்களின் சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து ஷேர் செய்து வருகின்றனர்.