இந்தியாவின் டாப் டென் நடிகர்களுக்கான அக்டோபர் மாத லிஸ்ட் வெளியிட்டுள்ளது ஆர்மிக்ஸ் மீடியா நிறுவனம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள் அஜித் விஜய் என பலர் இருந்து வருகின்றனர். அதேபோல் தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு பிரபாஸ் அல்லு அர்ஜுன் என பல முன்னணி நட்சத்திரங்கள் இருக்கின்றனர்.

இந்தியாவின் டாப் 10 நடிகர்கள்.. மொத்த இடத்தையும் தட்டி தூக்கிய தென்னிந்திய சினிமா, முதலிடம் யாருக்கு? லிஸ்ட் இதோ.!!

கன்னடத்தை பொறுத்தவரை நடிகர் யஷ் உட்பட அங்கும் பிரபல நடிகர்கள் இருந்து வருகின்றனர். இப்படி இந்திய சினிமா முழுவதும் உள்ள நடிகர்களில் அக்டோபர் மாதத்தின் டாப் 10 நடிகர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்டை ஆர்மெக்ஸ் மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த லிஸ்டில் தென்னிந்தியாவை சேர்ந்த நடிகர்களை பெரும்பாலான இடத்தை பிடித்துள்ளனர். ஒரே ஒரு இடம் மட்டுமே பாலிவுட் சினிமா சார்பாக அக்ஷய்குமார் பெற்றுள்ளார். அதிலும் குறிப்பாக முதலிடம் தமிழ் சினிமாவைச் சார்ந்த தளபதி விஜய்க்கு தான் கிடைத்துள்ளது.

இந்தியாவின் டாப் 10 நடிகர்கள்.. மொத்த இடத்தையும் தட்டி தூக்கிய தென்னிந்திய சினிமா, முதலிடம் யாருக்கு? லிஸ்ட் இதோ.!!

இது குறித்த லிஸ்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1. விஜய்

2. பிரபாஸ்

3. ஜூனியர் என்டிஆர்

4. அல்லு அர்ஜுன்

5. அக்ஷய் குமார்

6. அஜித் குமார்

7. சூர்யா

8. யஷ்

9. ராம்சரண்

10. மகேஷ் பாபு