தோல்வி இல்லாமல் தற்போது வரை வெற்றிக்கனியை ருசித்து வரும் இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்த நாளுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். தனது முதல் படமான பொல்லாதவன் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த இவர் தொடர்ந்து தனுஷ் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் பல விருதுகளையும், பாராட்டுக்களையும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றிருந்தன.

அந்த வகையில் இவர்களது காம்போவில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இவர் இயக்கிய விசாரணை திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று பல விருதுகளை குவித்திருந்தது.

அந்த வகையில் இவர் தற்போது தீவிரமாக இயக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சூரியின் விடுதலை திரைப்படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.