
Full VIdeo : – மீண்டும் அதிமுகவே ஆட்சியைப் பிடிக்கும் – அதிர வைத்த 4 கருத்து கணிப்பு முடிவுகள்.!!
TN Election Poll Results 2021 : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. உன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் மு கருணாநிதி ஆகியோர் மறைவிற்குப் பிறகு தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்த முதல்வர் பழனிசாமி எண்ணற்ற திட்டங்களின் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இதனால் மீண்டும் அதிமுக ஆட்சி அமையுமா அல்லது திமுகவிற்கு வாய்ப்பு அமையுமா என மில்லியன் டாலர் கேள்விகள் உள்ளன.
மேலும் இதுவரை வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாகவே அமைந்துள்ளன. சில கருத்து கணிப்புகளில் மட்டும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என முடிவுகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது ராஜ் டிவி, குமுதம், ஆதன் செய்திகள் மற்றும் நெட்வொர்க் டெமாக்ரசி ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.