நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு மாசான பாடலுடன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் அல்டிமேட் ஸ்டாராக திகழ்பவர் தான் அஜித் குமார். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

இப்படம் குறித்த புகைப்படங்கள் மற்றும் அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் இப்படத்தின் பாடல் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதன்படி, இப்படத்தில் ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள ‘சில்லா சில்லா’ பாடலின் படப்பிடிப்பு இன்னும் மூன்று நாட்களில் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது. இதனால் இப்பாடல் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.