துணிவு திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை மஞ்சு வாரியர் மலையாளத்தில் ஒரு பேட்டியில் துணிவு திரைப்படத்தின் அப்டேட்களை கொடுத்துள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அஜித் குமார். இவர் தற்போது நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் உருவாகும் “துணிவு” திரைப்படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரகனி மற்றும் பல திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.

மேலும் இப்படத்தை வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு முழு வீச்சில் செயல்பட்டு வரும் நிலையில் துணிவு திரைப்படத்தின் நிலவரம் பற்றி நடிகை மஞ்சு வாரியர் மலையாளத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் அவர், துணிவு படத்தில் இன்னும் ஒரு பாடல் மட்டும் ஷூட்டிங் செய்ய வேண்டி உள்ளது. படம் அனைவருக்கும் பிடித்த வகையில் ஒரு என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் தற்போது இப்படத்திற்கான டப்பிங் பணிகள் சென்றிருப்பதாகவும், விரைவில் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும் என்றும் தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.