தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி அதிக அளவில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரைக்கு வர தயாராக இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார். இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.

அதிக அளவில் பார்வையாளர்களை கவர்ந்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் - உற்சாகத்தில் ரசிகர்கள்.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் கடந்த ஜூலை 30ஆம் தேதி இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.

அதிக அளவில் பார்வையாளர்களை கவர்ந்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் - உற்சாகத்தில் ரசிகர்கள்.

அதில் பாரதிராஜா தாத்தாவாகவும்,பிரகாஷ்ராஜ் அப்பாவாகவும் நடித்துள்ளனர். நித்யாமேனன் தோழியாக நடித்துள்ளார். ட்ரைலரை பார்க்கும்போது ஒரு காமெடி கலந்த ஆக்சன் படமாக திருச்சிற்றம்பலம் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களில் அதிக அளவில் பார்வையாளர்களை கவர்ந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

Thiruchitrambalam – Official Trailer | Dhanush | Sun Pictures | Anirudh | Mithran R Jawahar