நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் OTT தளத்தின் ரிலீஸ் டேட் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

இந்திய திரை உலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தை பிரபல இயக்குனரான மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர்.

OTT தளத்தில் வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம்!!… எப்போது தெரியுமா?? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!.

ரிலீஸான மூன்று வாரங்களிலேயே பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் களைகட்டியது திருச்சிற்றம்பலம். தனுஷ் படங்களிலேயே இந்த அளவிற்கு கலெக்ஷன் வந்ததில்லை என்ற பெயரையும் பெற்றுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் மற்றும் அனிருத் இணைந்து இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

OTT தளத்தில் வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படம்!!… எப்போது தெரியுமா?? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!.

இந்நிலையில் இப்படம் ஓ டி டி தளத்தில் வெளியாக இருப்பது குறித்த தகவல்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.அதில், வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் படத்தை வெளியிடவுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரவபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.