மெர்சல் பட தயாரிப்பாளருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Thenandal Flims Murali Admitted in Hospital : தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று தேனாண்டாள் ஃபிலிம்ஸ். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம் இறுதியாக தளபதி விஜயின் மெர்சல் படத்தை தயாரித்து இருந்தது.

மெர்சல் பட தயாரிப்பாளருக்கு மாரடைப்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி.!!

வசூல் ரீதியாக மெர்சல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி என்றாலும் தயாரிப்பாளருக்கு இத்திரைப்படம் நஷ்டத்தை கொடுத்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக எந்த ஒரு படத்தையும் தயாரிக்கும் முயற்சியில் இறங்கவில்லை எனவும் கூறப்பட்டது.

ஆனால் நண்பன் திரைப்படம் தங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்ததாகவே தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது நிறுவனத்தின் உரிமையாளர் முரளி அவர்கள் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அவருக்கு லேசான மாரடைப்பு தான். நாளை அவருக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.