ரோஜா மல்லி கனகாம்பரம் ‘எனும் திரைப்படத்தின் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது

இயக்குநரும், நடிகருமான கே. பி. ஜெகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம் ‘எனும் திரைப்படத்தின் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு பூஜையுடன் திருச்செந்தூரில் தொடங்கியது

The shooting for the title teaser of the film 'Roja Malli Kanakambaram' began with a pooja in Tiruchendur
The shooting for the title teaser of the film ‘Roja Malli Kanakambaram’ began with a pooja in Tiruchendur

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கவிருக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடி மகிழ்ந்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ எனும் வெற்றி படத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் தயாரிக்கிறார். இப்படத்திற்கான தொடக்க விழா மற்றும் டைட்டில் டீசருக்கான படப்பிடிப்பு நேற்று திருச்செந்தூர் அருகே உள்ள சாஸ்தா கோவிலில் நடைபெற்றது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் கே. பி. ஜெகன் பேசுகையில், ” என்னுடைய வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் நான் கதையின் நாயகனாக நடிக்கிறேன். இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகும்” என்றார்.

The shooting for the title teaser of the film 'Roja Malli Kanakambaram' began with a pooja in Tiruchendur
The shooting for the title teaser of the film ‘Roja Malli Kanakambaram’ began with a pooja in Tiruchendur