நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..! | R.I.P Thavasi | Tamil Cinema | karuppan | Kollywood

Actor Thavasi Passed Away : தமிழ் சினிமாவின் கிழக்குச் சீமையிலே என்ற திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கி வருத்தப்படாத வாலிபர் சங்கம், அண்ணாத்த என பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருப்பவர் நடிகர் தவசி.

முரட்டு மீசையுடன் கருப்பன் குசும்புக்காரன் என்ற டயலாக்கை பேசி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் எனக் கூறலாம்.

இவர் கடந்த சில மாதங்களாக உணவுக் குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உடல் எடை மிகவும் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாமல் காணப்பட்டார்.

Actor Thavasi Passed Away

சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் தன்னுடன் நடித்த நடிகர்கள், திரைப் பிரபலங்கள் தனக்கு உதவுமாறு வீடியோ ஒன்றின் மூலமாக கோரிக்கை வைத்திருந்தார்.

இதனை அடுத்து சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி என பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு உதவிக்கரம் நீட்டி வந்தனர்.

இப்படியான நிலையில் நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம் என திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.