Thangam Kaalidas Mimicry Video

அச்சு அசலாக அப்படியே அசால்டாக சூர்யா மற்றும் விஜய் குரலில் பேசி அசத்தியுள்ளார் தங்கம் காளிதாஸ்.

Thangam Kaalidas Mimicry Video : தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜெயராம். இவருடைய மகன் காளிதாஸ் தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

பிரபல நடிகரின் மகனாக இருந்தாலும் வெற்றிக்காக போராடி வரும் ஒரு நடிகராகவே இருந்து வந்தார் காளிதாஸ்.

அச்சு அசலாக அப்படியே அசால்டாக சூர்யா மற்றும் விஜய் குரலில் பேசி அசத்திய தங்கம் காளிதாஸ் - பார்க்கப் பார்க்க ரசிக்க வைக்கும் வீடியோ.!!

தற்போது அனைவருமே அவரை பாராட்டும் வகையில் தங்கம் என்ற வெப் சீரிஸ் தொடரில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும் காளிதாஸை பாராட்டித் தள்ளி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் காளிதாஸ் சூர்யா மற்றும் விஜய் குரலில் அச்சு அசலாக அப்படியே பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.