தங்கலான் படகுழுவினரின் ஸ்பெஷல் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக விளங்கும் பா.ரஞ்சித் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் புதிய அப்டேட்டாக இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டதாக படகுழு அறிவித்திருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கும் ஸ்பெஷல் ரீல்ஸ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.