தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்திருக்கும் தங்கலான் திரைப்படத்தின் அப்டேட் வைரலாகி வருகிறது.

Thangalan movie latest update viral:

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அவரது நடிப்பில் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் “தங்கலான்” திரைப்படம் வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் KGF சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை எடுத்து சொல்லும் வகையில் உருவாகி இருப்பதால் படம் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின்
படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்ததாக கூறப்பட்டதை தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது இப்படத்தின் புதிய அப்டேட்டாக தங்கலான் படத்திற்கான ரிலீஸ் வேலைகளை நவம்பரில் தொடங்க இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் CEO தனஞ்செயன் பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.