98 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தாமரைச்செல்வி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

Thamarai Selvi Salary for BB5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 101வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இந்த வார ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கடைசியாக நடைபெற்ற நாமினேஷன் இல் தாமரைச்செல்வி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். சாதாரண கிராமத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞரான இவர் இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார்.

தைப்பூசமும் ஜோதி தரிசனமும்

இவருக்கு ஒருவாரத்திற்கு 70 ஆயிரம் சம்பளம் என பேசப்பட்டு இருந்த நிலையில் 14 வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய காரணத்தினால் இவருக்கு 9 லட்சத்து 80 ஆயிரம் சம்பளம் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடன் சுமையால் தத்தளித்து வரும் அவரது குடும்பத்திற்கு இந்த பணம் ஒரு அளவிற்கு உதவியாக இருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

Pongal Special-லாக அம்மாக்கு Diamond நகை வாங்கி கொடுத்து Surprise செய்த Arun and Aravind