Web Ads

உதயநிதி மகன் இன்பநிதியும், விஜய் மகன் ஜேசன் சஞ்சையும்: நெட்டிசன்ஸ் பார்வை

சினிமா தரும் பிரபலம் அரசியலுக்கு உதவும். மக்களுக்கும் எளிதாக முகம் பரிட்சயமாகும். அவ்வகையில், போட்டி ஏற்படுவது இயல்பு. இது தொடர்பாக, வைரலாகும் நிகழ்வு காண்போம்..

‘ஜனநாயகன்’ படப்பணியிலும், தவெக அரசியல் பணியிலும் தற்போது பிஸியாக இருக்கிறார் விஜய். இந்நிலையில், அவருடைய மகன் ஜேசன் சஞ்சையும் திரைப்பட இயக்கும் பணியைத் தொடர்ந்து, பாமகவின் கௌரவ தலைவரான ஜிகே மணி வீட்டு திருமண நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில், ஜேசன் விஜய் அப்பாவுக்கு பதிலாக கலந்து கொள்ளவில்லை என்றும், லைகா நிறுவனத்தின் கீழ் இவர் புதிதாக ஒரு படத்தை இயக்கி வரும் நிலையில், அந்த நிறுவனத்தின் அதிகாரி தமிழ்க்குமரன் அழைப்பின் பெயரில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

எனினும் திமுக கட்சி வாரிசு அரசியலை தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், உதயநிதிக்கு பின்னர் அவருடைய மகன் இன்பநிதியும் அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பார் என இணையவாசிகளால் கூறப்படுகிறது.

அதுபோல, காலச் சுழற்சியில் ஜேசன் சஞ்சய்யும் அப்பாவின் கட்சியில் இணைந்து கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் எனவும் கணிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாமக திருமண நிகழ்ச்சியில், ஜேசன் கலந்துகொண்ட வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள், விஜய் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

thalapathy vijays son jason sanjay interested in politics