அப்பாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற நேரில் சந்தித்து பேசியுள்ளார் நடிகர் விஜய்.

Thalapathy Vijay Meet SA Chandrasekhar : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரன் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.

இயக்குனராக பல்வேறு படங்களை இயக்கிய இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு தளபதி 68 படத்தின் டெஸ்ட் சூட்டிற்காக சென்று சென்னை திரும்பிய விஜய் முதல் வேலையாக தனது தந்தையை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.