Thalapathy Vijay in Childhood Photo

அப்போவே கேர்ள் பிரண்டுடன் பவ்யமாக போஸ் கொடுத்துள்ளார் தளபதி விஜய்.

Thalapathy Vijay in Childhood Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு முன்னதாக விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தளபதி விஜய் மிகவும் அமைதியானவர் என அனைவரும் கூற நாம் கேட்டிருப்போம். பள்ளி பருவத்திலே அப்படித்தான் அமைதியாக மாணவனாக பவ்யமாக இருந்துள்ளார். இவருடைய பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்றை நடிகர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ளார்.

பெண் தோழிகளுக்கு நடுவே நடிகர் விஜய் பவ்யமாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ப அண்ணனுக்கு அப்போதே கேர்ள் ஃப்ரெண்ட் இருந்திருக்கு என கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் விஜய் அச்சு அசலாக அப்படியே அவரது அம்மாவை போலவே இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.