Web Ads

தளபதி விஜய்க்கு 51-வது பிறந்தநாள்: ரசிகர்கள்-திரைப் பிரபலங்கள் வாழ்த்து

தளபதி விஜய் இன்று ஜூன் 22-ந்தேதி தனது 5-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தொடங்கி திரைப்பிரபலங்கள், அவரது கட்சி நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் தற்போது நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படக்குழு தரப்பில் இருந்து கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய்க்கு வாழ்த்து சொன்ன திரைப் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்தும் அவர்களின் வாழ்த்து குறித்தும் காண்போம்..

நடிகர் ராஜு மோகன், விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், உங்களை பார்க்க 8 வயது குழந்தையாக இருந்தபோது தியேட்டர் சீட்டில் எட்டி எட்டிப் பார்த்துள்ளேன். அதேபோல், இப்போது உங்கள் கைகள் எனது தோள்களைச் சுற்றிக் கொண்டுள்ளது.

உங்கள் மீதான எனது பிரியத்தைச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா, விஜய் அண்ணா’ என பதிவிட்டுள்ளார்.

நடிகர் யோகிபாபு வாரிசு படத்தில் விஜய் தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், நடிகையும் பாஜக நிர்வாகியுமான அலிசா அப்துல்லா தனது இன்ஸ்டா பக்கத்தில் விஜய் உடன் முன்னர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து குறிப்பில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் சார். உங்களுக்கு எப்போதும் அளவற்ற மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் கிடைக்க வாழ்த்துகள். நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் வாழ்த்துகள்’ என பதிவிட்டுள்ளார்.