தளபதி 67 படத்தின் அறிவிப்பு மற்றும் பூஜை எப்போது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். மாஸ்டர் படத்தை தயாரித்த 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது படத்தின் பூஜை மற்றும் அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் பூஜை டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் படம் குறித்த அறிவிப்பு டிசம்பர் 7ஆம் தேதி குட்டி டீஸருடன் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.